பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பரினிதி சோப்ரா (34). இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையாவார். நடிகை பரினிதி ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சதாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவிய நிலையில் தற்போது இருவரும் விமான நிலையத்தில் ஒரே காரில் ஏறி செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் காதலிப்பதை பிரபல பாடகர் ஹார்டி சந்து உறுதிப்படுத்தியதோடு அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் நடிகை பரினிதி தங்கள் காதலை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. மேலும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பிரபல பாடகர் கூறியுள்ளதால் அவர்களுக்கு தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.