
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று ஊடகப் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது அதிமுகவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.