கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு ஒரு மாவில் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஜெபின் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளில் குளச்சல்- முளகுமூடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து கருக்கன்குழி பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை ஜெபின் முந்தி செல்ல முயன்றார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.