தற்போது ஆதார் அடிப்படையிலான UPI வாயிலாக கூகுள் பே பயனாளர்கள் டெபிட் கார்டு இன்றி UPI பின் நம்பரை உருவாக்க இயலும். இவ்வசதியின் வாயிலாக இன்னும் பல மக்களுக்கு UPI ஐடிகளை உருவாக்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும். இந்நிலையில் ஆதார் சார்ந்த UPI முறையை அமைப்பது எப்படி என்பது குறித்து நாம் தற்போது பார்ப்போம். முதலில் ஆதார் சார்ந்த UPI முறையை அமைப்பதற்கு முன் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும், உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் ஒன்று தானா என்பதை சரிபார்க்கவும்.

அதிலும் குறிப்பாக உங்கள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் போனிலுள்ள கூகுள் பே செயலியை திறந்து அதில் Add account என்பதனை கிளிக் செய்யவும். அதன்பின் உங்களது மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கியை தேர்வு செய்து next என்பதை கிளிக் செய்யவும். அதன்பின் உங்களது மொபைல் எண் மற்றும் பேங்க் அக்கவுண்ட் போன்ற இரண்டையும் வெரிஃபை செய்ய ஆதார் மோடை தேர்வு செய்ய வேண்டும்.

அதனைதொடர்ந்து உங்களது வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆதார் எண்ணின் முதல் 6 டிஜிட்களை என்டர் செய்ய வேண்டும். பின் உங்கள் பரிவர்த்தனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் 4 (அ) 6 டிஜிட் UPI PIN நம்பரை அமைக்க வேண்டும். தற்போது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உங்களது வங்கி ஒரு வெரிஃபிகேஷன் OTP அனுப்பும். உங்களுக்கு விரும்பமான UPI PIN நம்பரை அமைத்து, மீண்டும் ஒரு முறை கன்ஃபார்ம் செய்ய வேண்டும்.

அவ்வளவுதான் இனிமேல் எளிமையாக பணம் அனுப்பலாம். அதேபோன்று Google பயனாளர்களின் ஆதார் எண்ணை சேமிக்காது எனவும் NPCI-யிடம் அதை வழங்குவதற்குரிய ஒரு மீடியமாகவே செயல்படும் எனவும் கூகுள் நிறுவனமானது உறுதியளித்திருக்கிறது. அதோடு ஆதார் சார்ந்த UPI முறை பயன்பாட்டை விரிவுபடுத்தி, டிஜிட்டல் பேமெண்ட்களை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.