தற்போது சமூகவலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ரூ.30,000-க்கும் மேற்பட்ட பணம் இருக்கும் வங்கிக் கணக்குகளானது மூடப்படும் என அச்செய்தி தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக சொல்லி புகைப்படத்துடன் இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணம் மற்றும் வங்கிக்கணக்கு குறித்த விவகாரம் என்பதால் இந்த வைரல் செய்தியை அரசு நிறுவனமான PIB தீவிரமாக விசாரித்து உண்மை தன்மையை சோதித்தது.

அந்த விசாரணையில் வைரலாக பரவி வரும் இச்செய்தி முற்றிலும் தவறானது என்று தெரியவந்தது. இதனை PIB டுவிட்டர் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்து உள்ளது. குடிமக்கள் @PIBFactCheck-ஐ டுவிட்டரில் பின் தொடரலாம். அரசாங்கத் திட்டம் (அ) அரசு குறித்த ஏதேனும் செய்திகள் உண்மையா (அ) பொய்யா என்பதை கண்டறிய PIB உண்மை சரிபார்ப்பின் உதவியை பெறலாம் என தெரிவித்துள்ளது. த

வறான தகவல் பரவுவதை தடுக்க பத்திரிகை தகவல் உண்மை சரிபார்ப்பு குழு செயல்படுகிறது. இதை செய்ய 918799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணில் PIB உண்மைச் சரிபார்ப்புக்கு (அ) [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஸ்கிரீன்ஷாட், டுவிட், பேஸ்புக் இடுகை (அ) சந்தேகத்திற்கிடமான செய்திகள் (அ) வீடியோவின் URL-ஐ அனுப்ப வேண்டும். இதன் வாயிலாக நீங்கள் உண்மைகளை அறிந்துகொள்வீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.