புதுச்சேரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நர்சிங் சேர்க்கை இந்திய நர்சிங் கவுன்சிலுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற வேண்டும் என கோரிக்கை இழந்த நிலையில் நர்சிங் சேர்க்கை தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்க வேண்டும் என INC புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் இந்திய நர்சிங் கவுன்சிலின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அரசால் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதே சமயம் இந்த நர்சிங் சேர்க்கைக்கான தகுதி தேர்வு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அரசு, தனியார் மற்றும் நிகர் நிலை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அரசு செவிலியர் கல்லூரி செயற்கைக்கான நுழைவுத் தேர்வு இந்த வருடம் நடைபெற உள்ளதாகவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் நர்சிங் திறன் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.