தமிழ் சினிமாவில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் டைரக்டர் அட்லீ. இவர் இப்போது ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 2023ம் வருடம் திரையரங்குகளில் ரீலிஸ் ஆகவுள்ளது.

இதனிடையில் அட்லீ கடந்த 2014ம் வருடம் நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை தன் சமூகவலைதளத்தில் டைரக்டர் அட்லீ மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது அட்லீ மற்றும் பிரியா தம்பதியினருக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.