நடிகை ஹன்சிகா தனது காதலர் சொஹைல் கதூரியாவை சென்ற டிசம்பர் 4-ம் தேதியன்று திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தான் ஜெய்பூரில் உள்ள அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தை வீடியோ எடுத்து டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கு கொடுத்துவிட்டனர். அந்த வீடியோவின் டிரைலரானது இப்போது வெளியாகியுள்ளது.

இதனிடையில் திருமணம் அன்று டென்ஷனாகி சொஹைலிடம் பேசியதோடு, அழவும் செய்தார் ஹன்சிகா. அதோடு யாருடைய கடந்த காலத்தையும் பார்க்கக்கூடாது என்று நீங்கள் தானே சொல்லிக் கொடுத்தீர்கள் என தன் தாயிடம் கூறி இருக்கிறார். பாரீஸில் வைத்து ஹன்சிகாவிடம் தன் காதலை கூறினார் சொஹைல். அதனை தொடர்ந்து ஹன்சிகாவின் முதல் திருமணம் பற்றிய தகவல் வெளியாகியது.

இதில் சொஹைலுக்கும், ரிங்கி என்பவருக்கும் முன்னதாக கோவாவில் நடைபெற்ற திருமணத்தில் ஹன்சிகா கலந்துகொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகியது. அதாவது, ஹன்சிகாவின் தோழி தான் அந்த ரிங்கி என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து நெருங்கிய தோழியின் கணவரை திருடிய ஹன்சிகா என சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிக்க துவங்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில் அமைந்துள்ளது இந்த திருமண டிரைலர்.