தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது இறைவன், ஜவான், நயன்தாரா 75 போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், விக்ரம் போன்ற பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனுடன் நயன்தாரா இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தற்போது நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசுக்கு பிறகு தொடங்க இருக்கிறது. மணி ரத்தினம் இயக்கும் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் நயன்தாரா இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.