உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், தடை செய்யப்பட்ட கூர்மையான ‘சைனீஸ் மாஞ்சா’ நூலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷஹாபுதீன் அன்சாரி என்ற அந்த இளைஞர் வாகனத்தில் சென்றபோது, கண்ணுக்குத் தெரியாத அந்த கண்ணாடித் துகள்கள் பூசப்பட்ட நூல் அவரது கழுத்தைச் சுற்றி இழுத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Shahabuddin Ansari (@its.saaho17)

நல்லவேளையாக அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததாலும், அதன் பட்டை நூலைத் தடுத்ததாலும் கழுத்தில் நேரடி காயம் ஏற்படாமல் உயிர் தப்பினார். இருப்பினும் அவரது சட்டை கிழிந்து, தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் இது போன்ற ஆபத்தான நூல்களால் பலர் உயிரிழந்து வரும் நிலையில், தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களின் அவசியத்தை வலியுறுத்தி அந்த இளைஞர் வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது.