உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், நீதிக்காகத் தனது அந்தரங்கத்தையே ஆதாரமாகப் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மெடிக்கல் கடைக்குச் சென்ற அந்தப் பெண்ணிற்கு, கடை உரிமையாளர் கிஷுன் குப்தா மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, கடந்த 3 மாதங்களாக அந்தப் பெண்ணை மிரட்டித் தொடர்ந்து சீரழித்து வந்துள்ளார்.
இந்த நரக வேதனையிலிருந்து மீள முடிவெடுத்த அந்தப் பெண், கிஷுன் குப்தா மீண்டும் வந்தபோது தனது மொபைலை ரகசியமாக மறைத்து வைத்து, அவன் செய்த அத்துமீறல்களை வீடியோவாகப் பதிவு செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
அந்தப் பெண் அளித்த வீடியோ ஆதாரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோரக்பூர் போலீஸார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து மெடிக்கல் கடை உரிமையாளர் கிஷுன் குப்தாவைக் கைது செய்தனர். வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர், வீட்டில் இருக்கும் முதியவர்கள் எனத் தனது குடும்ப மானத்திற்காக இத்தனை காலம் மவுனம் காத்த அந்தப் பெண், இறுதியில் காமவெறியனுக்குப் பாடம் புகட்டத் துணிச்சலாக எடுத்த முடிவு பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கைதான கிஷுன் குப்தா மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். “குற்றவாளிகளைப் பிடிக்கத் தொழில்நுட்பத்தை ஆதாரமாக்கினாலும், பெண்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனப் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
