இந்தியாவில் போலி ரேபிஸ் தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் ‘அபயாரப்’ என்ற பெயரிலான போலி ரேபிஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலியாவின் தடுப்பாற்றல் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
Counterfeit Rabies Vax in India since Nov 2023
Those who have taken 5 shots because stray cat or dog looked angrily at them may need 5 more shots now
Fly abroad & take your new shots because 2 years down the line, you may hear that the new one in Vishwaguru is also counterfeit pic.twitter.com/mBLsWNcDzB
— Neo (@neorevolt) December 24, 2025
இந்தத் தடுப்பூசிகளில் போதிய மருத்துவ வீரியம் இல்லாத காரணத்தால், இவற்றைச் செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு வெறிநாய்க்கடி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எதிரான முழுமையான பாதுகாப்பு கிடைக்காது என்று அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்தியாவில் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட ஆஸ்திரேலியப் பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் உடனடியாக மருத்துவரை அணுகி, அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
