
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் லோகந்தி பகுதியில் கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கிஷோரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை கிஷோர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது தனது கணவரை பயமுறுத்துவதற்காக அந்தப் பெண் ரயில் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார்.
அதேசமயம் எதிர்பாராதவிதமாக ரயில் வந்ததால் அந்த பெண் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.