
பாஜக தனித்துப் போட்டியிடுவது புதிதல்ல என நிர்வாகிகள் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் கேசவிநாயகம் பேசியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் தொடங்கி நடைபெற்று வரக்கூடிய நிலையில், மேடையில் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் முதலாவதாக பேசி வருகிறார்.
அவர் மாவட்ட தலைவர்கள் மத்தியில் பேசும்போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக தற்போது விலகி இருக்கிறது. தமிழகத்தில் நாம் பலமுறை தனித்து போட்டியிட்டு உள்ளோம். தனித்துப் போட்டியிட்டால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
நாம் தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல. அதே நேரத்தில் அகில இந்திய பாஜக தலைமை மாநில தலைமையை முழுமையாக கண்காணித்து வருகிறது. இதனால் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் சரியாக பேச வேண்டும், பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஒரு அறிவுறுத்தலை விடுத்திருக்கிறார்.