தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். அப்போது முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதம் கைகளப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த முனியா கணேசன் அறிவாளால் பட்டமுத்துவை வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தடுக்க வந்த அருண்குமார் என்பவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனியா கணேசன் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.