
தமிழகத்தில் விவசாயிகளுக்கு பரிசு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மாநிலத்தில் உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசு பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளதாம்.
கடந்த 1999 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது உழவர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வருடத்துடன் 25 வருடங்கள் நிறைவு செய்கிறது. இதன் காரணமாக உழவர் சந்தையில் அதிக லாபம் ஈட்டும் விவசாயிகளுக்கு பரிசு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம். மேலும் இது தொடர்பான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.