உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  ஹமிர்பூர் மாவட்டத்தின் ரத் பகுதியில்  சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி, சுமார் 20 அடி வரை இழுத்துச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தடுமாறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மிகுதியான வேகத்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த சிறுவன் மோட்டார் சைக்கிளின் கீழ் சிக்கிக்கொண்டு, சில அடிகள் தள்ளி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து குழந்தையை மோட்டார் வாகனத்திலிருந்து மீட்டுள்ளனர். பிறகு அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனின் நிலை தற்போது மிக மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை பாதுகாப்பு மீதான அலட்சியத்தும், வேகக்கட்டுப்பாடுகள் மீறப்படுவதும் இன்னும் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்துள்ளனர்.