தமிழக அரசு வேலை இல்லாத இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனியார் நிறுவனங்கள் தமிழக அரசின் ஒப்புதலோடு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி சனி கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும். எம்.வி. எம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் குறைந்தபட்சம் 100 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் சுமார் 1000 பணியிடங்கள் நிரப்புவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மத்திய, மாநில அரசு தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளும், தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகளும் வழங்குவதற்கான பதிவுகளும் நடைபெறுகின்றன. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள், இன்ஜினியரிங் பட்டதாரிகள், நர்ஸ் கள், பார்மசி படித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் ஆகியோர் பங்கேற்கலாம்.
மேலும் வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் சென்று பதிவு செய்யலாம்.வேலை வாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல்,0451-2904065 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தகவலை பெறலாம். இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை அமைச்சர் பெரியசாமி மற்றும் சக்கரபாணி ஆகியோர் வழங்குவர்.