ஒரு விமானம் பறப்பதற்குள் அதன் இறக்கையில் ஒரு வாத்து அமைதியாக நின்று கொண்டிருக்கும் காட்சி கொண்ட வீடியோ சமீபத்தில் இணையத்தை கலக்கியுள்ளது. “ஒரு வாத்து, ஒரு முழு விமானப் பயணம் முடியும் வரை அதன் இறக்கையின் மேல் நின்று கொண்டே இருந்தது” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ 1.99 கோடி பார்வைகள் மற்றும் 2.3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்களை பெற்றுள்ளது.

பலர் இந்த வாத்தின் சமநிலையை பாராட்டினாலும், மற்றவர்கள் இது போலியான வீடியோ என சந்தேகத்துடன் வர்ணிக்கின்றனர். “600 மைல் வேகத்தில் ஒரு இறகும் அசையாமல் இருக்குற வாத்து நிஜமா?” என ஒரு நெட்டிசன் எழுதியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த சிலர் இது AI மூலம் உருவாக்கப்பட்டதா? என சந்தேகித்துள்ளனர். ஒருவர் “இந்த புதிய தலைமுறை வாத்துகளும் சோம்பேறிகளாகிட்டாங்க” என நக்கலாக குறிப்பிட்டிருக்கிறார்.

 

மேலும் “விசா இல்லை, பாஸ்போர்ட் இல்லை… வெறும் வைப் மட்டும்” என ஒருவர் கலகலப்பாக கமெண்ட் செய்துள்ளார். இது நிஜமா இல்லையா என்பதில் சந்தேகம் இருந்தாலும், இந்த வீடியோ மக்களை ஆச்சரியமாகவும் ரசிக்க வைத்திருப்பது மட்டும் உறுதி. ஒருவேளை இது நிஜம் என்றால், இந்த வாத்து விமானத்தில் ‘மாஸ்’ லெவலுக்கு அப்கிரேட் அடைந்தது எனலாம்.