
மகாராஷ்டிராவில் மாதாபிசாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதியில் இருந்து கேரளா சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரூபாய் 48 லட்சம் ஹவாலா பணத்தை, துணிப்பையில் தனி அறை அமைத்து கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவாலா பணம் கடத்தி வருவதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி காவல்துறையினர் பாலக்காடு ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாதாபிசாபு கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவர் வைத்திருந்த ரூ.48 லட்சம் ஹவாலா பணத்தையும் பறிமுதல் செய்தனர்.