கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் குடுபு கிராமம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 27 ஆம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் போட்டியின் போது விளையாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் “பாகிஸ்தான் வாழ்க” என்று சத்தமிட்டார்.

அவர் கூறியதை கேட்டதும் அங்கிருந்த சக போட்டியாளர்கள் ஆத்திரமடைந்த நிலையில் அவரை சரமாரியாக அடித்து தாக்கினார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நபரை அங்கிருந்தவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு அடித்ததில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பின்னர் இந்து சம்பவம் தொடர்பாக 15 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதோடு அப்பகுதி மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியாத நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.