தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்யப் போவதாக கடலை மிட்டாய் வியாபாரி ட்விட் செய்த நிலையில் அவருக்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சப் அர்பன் மாவட்டம் செம்பூரை சேர்ந்த இளைஞர் புறநகர் ரயிலில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது.

தொழிலில் நஷ்டம், கடன் அதிகரிப்பால் கடலை மிட்டாய் விற்கும் அந்த இளைஞர் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனிடையே அந்த இளைஞர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டை பார்த்த போலீசார் வியாபாரியை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் கடலை மிட்டாய் வியாபாரிக்கு கவுன்சிலிங் வழங்கி பின்னர் அனுப்பி வைத்தனர். போலீசாரின் இச்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.