இந்தியாவில் 79 சதவீதம் பேர் இன்ஃப்ளூயன்ஸ்சர்களின் விளம்பரங்களை நம்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களை விட்டு பிரிக்க முடியாத ஒன்றாக செல்போன்கள் மாறி உள்ளது.

குண்டூசி முதற்கொண்டு அனைத்துமே சமூக வலைதளங்கள் மூலம் கிடைப்பதால் அனைத்து தேவைகளையும் செல்போன்கள் கண் முன் கொண்டு வந்து விடுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் 79% பேர் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களின் விளம்பரங்களை நம்பி பொருட்களை வாங்குவதாக இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.