ஹரியானாவில் 15 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய சகோதரனுடன் பள்ளிக்கு சென்றார். சகோதரனை அவனது பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி சாலையின் ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் இருந்த இருவர் சிறுமியை கவனித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை கடத்தினர்.

அங்கிருந்து கார் சென்ற நிலையில் ஓடும் காரில் வைத்து  சிறுமியை 2 முறை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதோடு “இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளனர். பள்ளி முடியும் நேரம் வந்ததும் அந்த நபர்கள் கிராமத்தின் அருகே சாலையின் ஓரத்தில் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு சென்ற நிலையில் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறினார்.

அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.