ஜெய்ப்பூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று சனிக்கிழமை மாலை நடந்தது. முரளிபுரா காவல் நிலைய எல்லையில் உள்ள காட்டு ஷ்யாம் கோயில் அருகே, சாலை எண் 5-ல், பகல் வெளிச்சத்தில் ஒரு மனிதர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான சந்திரசேகர் என்ற கூலி தொழிலாளி.
அந்த பயங்கர தாக்குதலுக்கு பலியானார். இந்த முழு சம்பவமும் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு ஸ்கார்ப்பியோ கார் ஓட்டுநர், சந்திரசேகரை முதலில் இடித்து, பின்னர் அவரை மோதி தப்பியோடுவது தெளிவாகத் தெரிகிறது.
किसने कहा #गुलाबी_नगरी मे गुंडो का आतंक है,
असल मे राजस्थान मे गहलोत साहब की समाजवादी सरकार है।
मामूली कहासुनी के बाद का दृश्य। pic.twitter.com/Mu5tuOj9qf— एक नजर (@1K_Nazar) August 16, 2025
மாலை 5 மணியளவில், ஸ்கார்ப்பியோவில் பயணித்த 4-5 பேர் சிகர் நெடுஞ்சாலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு காருடன் மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. ஸ்கார்ப்பியோவில் இருந்தவர்கள், எதிர் காரின் ஜன்னல்களை உடைத்தனர்.
கூட்டம் கூடியதால், தாக்குதல்காரர்கள் தப்பிக்க முயன்றனர். இதில், சந்திரசேகர் தவறி விழ, ஸ்கார்ப்பியோ ஓட்டுநர் அவரை மோதி விட்டு தப்பினார். காயமடைந்த சந்திரசேகரை கன்வாட்டியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்த, காவல்துறை உடனடியாக வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்துள்ளது.
