ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில், இரவு நேரத்தில் ஒரு வெறித்த சாலையில் ‘தலை இல்லாத பேய்’ போன்று தோன்றிய சம்பவம், பார்த்தவர்கள் உள்ளங்களை நடுங்க விட்டது. ஒரு மனிதர் தனது தலையை பொம்மையை கையில் தாங்கி, சாலையில் ஓடி கொண்டிருக்கும் காட்சி, அங்கு வாகனம் ஓட்டி சென்றவர்களை பதற வைத்தது.
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில், குறிப்பாக X (டிவிட்டர்)யில் வைரலாகி, பார்வையாளர்களிடையே பயமும் சிரிப்பும் கலந்த கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ‘ஸ்த்ரீ 2’ திரைப்படத்தில் காட்டப்பட்ட தலை இல்லாத பேய் கதாபாத்திரத்தை ஒத்திருப்பதால், பலரும் அதை இணைத்து பேசி வருகின்றனர்.
वीडियो राजस्थान के टोंक जिले का बताया जा रहा है.
हालांकि विडियो प्रेंक के तौर पर है लेकिन कमजोर दिल वालो के लिए जानलेवा साबित भी हो सकता है.
मेरा @RajPoliceHelp से निवेदन रहेगा इस तरह की हरकते या प्रेंक करने वालो पर कानूनी कार्यवाही कीजिए ,ताकि आमजन में निर्भय का माहौल बना रहे. pic.twitter.com/LmBUVKoT8i— jasraj singh rajpurohit (@js_rajpurohit10) October 17, 2025
வீடியோவை @js_rajpurohit10 என்ற கணக்கில் பகிர்ந்து, இது ஒரு பிராங்க் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் இத்தகைய செயல்கள் பொதுமக்களுக்கு ஆபத்தானவை என விமர்சித்துள்ளனர்.
இந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் திடீரென அந்த ‘பேய்’வை கண்டு பதறி, வேகமாக ஓடி தப்பிக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இது ஒரு தீய சர்ச்சை (பிராங்க்) என்று உறுதிப்படுத்தப்பட்டாலும், இரவு நேரத்தில் இத்தகைய அச்சுறுத்தல் போன்ற செயல்கள், இதய பலம் இல்லாதவர்களுக்கு உயிருக்கு ஆபத்தாகலாம் என நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போஸ்ட்டில், ராஜஸ்தான் போலீஸ் நிர்வாகத்திடம் இத்தகைய பிராங்க் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிலர் இதை வேடிக்கையாக பார்த்து சிரிக்க, மற்றவர்கள் ‘இது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் அபத்தமான விளையாட்டு’ என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவியதால், பொதுமக்கள் நலனுக்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என விவாதம் தொடங்கியுள்ளது.
