
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் வீட்டின் பின்னால் உள்ள செப்டிக் டேங்கில் விக்னேஷ் மற்றும் சதீஷ்குமார் இறந்த நிலையில் சடலமாக காணப்பட்டனர்.
இதனை அறிந்த விஜயகுமாரின் உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளவரசி 2 குழந்தைகளையும் கொன்று விட்டார் என உறவினர்கள் தெரிவித்தனர். அதன் பின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளவரசியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.