தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருபையனஅள்ளி கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி 16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்தனர். இந்நிலையில் நடுக்கல்லில் வீரன் வலது கையில் பெரிய வாளை ஓங்கி பிடித்தவாறு, இடது கையில் குதிரையை பிடித்துள்ளவாறும் இருக்கிறது.
மேலும் வீரரின் கைப்பகுதியில் அரசருக்குரிய பட்டைகளும், வீர பட்டைகளும், கால்களுக்கு அருகில் கம்பமும், கம்பத்தின் மேல் சக்கரம் கொண்ட அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிதைந்த நிலையில் மற்றொரு சிறிய நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தை சேர்ந்தது என ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் இருக்கும் தொல்லியல் சின்னங்களை கண்டுபிடிக்க விரிவாக கள ஆய்வு நடத்தப்படும் என ஆய்வு குழுவினர் கூறியுள்ளனர்.