
உடம்பில் செல் இருக்கிறதோ, இல்லையோ கையில் செல்போன் இல்லாமல் நடமாடும் மனிதர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஒருவர் தனது மொபைலை எப்படி பிடித்து பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரது ஆளுமை திறனை நிர்ணயம் செய்ய முடியும் என ஆய்வுகள் வெளியாகி ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஒரே கையில் போனை பிடித்து அந்த கையின் கட்டை விரலையே இயக்குபவர்கள் தன்னம்பிக்கையும் நேர்மையான எண்ணமும் கொண்டிருப்பார்கள்.
இரு கைகளால் போனை பிடித்து இரு கட்டை விரல்களையும் பயன்படுத்துபவர்கள் அனைத்து சவால்களையும் பரிசீலித்து கவனமாக செயல்பட கூடியவர்கள். புத்திசாலித்தனமாக பேசும் இவர்கள் அப்பாவிகளாகவும் இருப்பார்களாம். ஒரு கையால் போனை பிடித்து இன்னொரு கையின் ஆள்காட்டி விரலால் பயன்படுத்தபவர்கள் தனித்துவமான திறமை கொண்டவர்களாகவும் கற்பனைத்திறன் மிகுந்தவர்களாகவும் படைப்பாற்றலில் சிறந்து விளங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த தகவல்கள் ஆளுமை திறனை பற்றி பகுப்பாய்வு செய்யும் நிபுணர்களின் அறிக்கையின் அடிப்படையில் கொண்டது.