டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா செட் செய்த 157 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. அந்த அணியின் துவக்க வீராங்கனை லாரா மட்டும் 61 ரன்கள் எடுத்தார். இருபது ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.