சென்னை புறநகரில் தினசரி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என பலர் புறநகர் ரயில்களையே அதிக அளவில் விரும்புகிறார்கள். இதன் சராசரி கட்டணம் ரூ. 5 ஆகும். அதன்பிறகு தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில் வழித்தடத்தில் தினசரி 4.5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இதனால் பீக் ஹவர்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படுகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் புறநகர் ரயிலை ஏசி பெட்டிகளுடன் கூடிய வசதியுடன் இயக்குவதற்கு சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான டெண்டர் நேற்றைய தினம் விடப்பட்ட நிலையில் உரிய நிறுவனத்திடம் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஒப்படைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையில் பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் கட்டணம் அதிகமாக இருந்தாலும் புறநகர் ஏசி ரயில்களை பயணிகள் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.