
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் சுதிர் வர்மா தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். முதற்கட்ட தகவலின் அடிப்படையில் அவர் சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இவர் குந்தனப்பு பொம்மா, செகண்ட் ஹேண்ட், ஹூட் அவுட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவ்வாறு இளம் நடிகர் சுதிர் வர்மா தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாகவே திரைலகினர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.