தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம் மற்றும் சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்படம் 210 கோடி வசூலித்துள்ளதாக படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் புதிய வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆன 11 நாட்களில் 250 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் திருப்பூர் சுப்ரமணியம் 210 கோடி வசூல் செய்ய வாய்ப்பே கிடையாது என்று கூறியிருந்த நிலையில் தற்போது 250 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு வெளியிட்டுள்ள தகவலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.