தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வந்த ஆர்.கே.சுரேஷ், பாலா டைரக்டு செய்த தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பின் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சென்ற 2020ம் வருடம் மது லதா என்பவரை திருமணம் செய்துகொண்ட ஆர்.கே.சுரேஷுக்கு, 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இது தொடர்பான தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும் குழந்தைக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும், கடவுள் அருளால் தற்போது தன் மகன் நலமாக உள்ளதாகவும் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அனைவரும் தனது மகனுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் ஆர்.கே.சுரேஷ்.