வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாகப் பல்வேறு கடுமையான உள்நாட்டுப் பிரச்சினைகளையும் பொருளாதாரச் சிக்கல்களையும் சந்தித்து வருகிறது. அங்கு நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளன.

 

இந்தச் சூழ்நிலையில், இங்கிலாந்து அரசு கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்து நாடு தற்போது பெரும் அழிவின் விளிம்பில் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இங்கிலாந்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மின்சாரக் கட்டணம் மற்றும் அங்கு நடைமுறையில் உள்ள பசுமை ஆற்றல் கொள்கைகளே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், உலகெங்கிலும் இருந்து எல்லையைக் கடந்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் இங்கிலாந்தை மிகப்பெரிய பேரழிவிற்குத் தள்ளியுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைப் சரியாகப் பயன்படுத்தாமல், தவறான கொள்கைகளால் இங்கிலாந்து தன் சொந்தப் பொருளாதாரத்தையே அழித்துக் கொள்கிறது என்றும் டிரம்ப் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.