மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டம் ராவேர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய சிறுமி கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த அந்த சிறுமி திடீரென பத்திரமாக வீடு திரும்பிய சம்பவம், காவல்துறை விசாரணைக்கும் அப்பகுதி மக்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் நிம்மதியையும் அளித்துள்ளது.

மேலும் என்ன நடந்தது என்றே தெரியாமல் தவித்து வந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, அவரது வருகை ஒரு மாபெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. முன்னதாக, அந்தச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் மற்றும் அமைப்பினர், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யக் கோரி போராட்டங்களிலும் ஈடுபட்டனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பல தனிப்படைகளை அமைத்துச் சிறுமியைத் தேடும் பணிய தீவிரப்படுத்தியதோடு, சந்தேகத்தின் பேரில் விசாரணையையும் முடுக்கிவிட்டனர்.

வழக்கின் தீவிரத் தன்மை காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வந்தது. ஆனால், அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் அந்த சிறுமி பாதுகாப்பாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சிறுமி உண்மையிலேயே கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் வீட்டை விட்டுச் சென்றாரா என்பதை பற்றி குறித்து உண்மைத் தன்மையை அறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு திடீர் திருப்பத்தைக் கண்டுள்ள நிலையில், பரப்பப்பட்ட வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சட்டப்படி உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.