பிரேசில் நாட்டின் கடற்கரையில் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக ஓய்வுநேரத்தைக் கழித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை எப்போது எந்த ரூபத்தில் ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை அறிய முடியாத அளவுக்கு, கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைத்து வருகிறது. மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாகத் தொடங்கிய ஒரு விடுமுறை நாள், சில நொடிகளில் பெரும் சோகத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடற்கரை மணற்பரப்பில் அந்தப் பெண் இயல்பாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென வானத்திலிருந்து விழுந்த சக்திவாய்ந்த மின்னல் அவர் மீது நேரடியாகத் தாக்கியது. மின்னல் தாக்கிய அடுத்த கனமே அவர் மணலில் சுருண்டு விழுந்த காட்சி சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

மேலும் அருகே இருந்த குடும்பத்தினரும் கடலோரப் பகுதி மக்களும் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விரைந்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானிலை மாற்றம் அல்லது லேசான மழைக்காலங்களில் கடற்கரை மற்றும் திறந்தவெளிகளில் இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும், “இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனித வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது” என்று கூறித் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், திறந்தவெளிகளில் மின்னல் நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.