கேரளாவின் பிரபல இஸ்லாமிய அறிஞரும், காந்தாபுரம் பிரிவைச் சேர்ந்த சமஸ்தா தலைவருமான காந்தாபுரம் ஏ.பி. அபூபக்கர் முலியார் (ஷேக் அபூபக்கர் அகமது), பெண்கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையையும் அரசியல் புயலையும் கிளப்பியுள்ளன. பெண்கள் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டு வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது கேரளாவில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்ற ‘ஹுப்புல் ரசூல்’ மாநாட்டில் பேசிய காந்தாபுரம், “பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும்; அவர்கள் பொதுவெளியில் நுழையக் கூடாது. இதைக் புனித குர்ஆனும் சொல்கிறது” என்று தெரிவித்தார். மேலும், பெண்களைப் பொது மேடைகளுக்குக் கொண்டு வருவது “பெரும் அழிவுக்கு” வழிவகுக்கும் என்றும், இஸ்லாம் பெண்களின் பாதுகாப்பிற்காக பர்தா மற்றும் விலகி வாழுதலை வலியுறுத்துவதாகவும் அவர் வாதிட்டார்.
केरल के ग्रैंड मुफ्ती कंथापुरम ए.पी. अबूबकर मुसलियार ने कहा कि महिलाओं को अपने घरों तक ही सीमित रहना चाहिए और महिलाओं को पब्लिक एरिया में लाने से “बड़ी तबाही” होगी
उन्होंने पर्दे का बचाव किया और महिलाओं की तुलना एक हार से करते हुए कहा कि “अगर हार को अपनी सुंदरता बनाए रखनी है, तो…
— Bharat (@BharatX20) August 31, 2026
இதற்கு ஒரு உதாரணமாக, பெண்களை ஒரு தங்கச் சங்கிலியுடன் ஒப்பிட்ட அவர், தங்கத்தின் மதிப்பைப் பாதுகாக்க அது எப்படி பெட்டிக்குள் பத்திரமாக இருக்க வேண்டுமோ, அதேபோலத்தான் பெண்களும் இருக்க வேண்டும் என்றார். அந்தச் சங்கிலியை வெளியே எடுத்தால் யார் வேண்டுமானாலும் தொடலாம், அதன் மதிப்பும் குறைந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார். பெண்களின் “கண்ணியத்தைப் பாதுகாக்கவே” இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 100 ஆண்டுகளாக சமஸ்தா அறிஞர்கள் இதனையே கற்பித்து வருவதாகவும் அவர் நியாயப்படுத்தினார்.
சமீபத்தில் காந்தாபுரம் தலைமையிலான சமஸ்தா கேரளா ஜமியத்துல் உலமா வெளியிட்ட சுற்றறிக்கையின் தொடர்ச்சியாகவே இந்த சர்ச்சைக் கருத்து வந்துள்ளது. மத நிகழ்ச்சிகளின் போது பெண்கள் ஆண்களுடன் மேடைகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது அல்லது பொதுவெளியில் ஆண்களுடன் சேர்ந்து தோன்றக்கூடாது என்று அந்தச் சுற்றறிக்கை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் கேரளாவில் மத நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் பெண்களின் சுதந்திரம் பற்றிய விவாதங்களை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
