தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கியப் பிரமுகர்கள் இணைந்தபோது அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கடுமையான எதிர்மறைக் கணிப்புகள் அனைத்தும் தற்போது தங்களின் தவறான மதிப்பீடுகளால் கேலிக்குரியதாகியுள்ளன.

கடந்த காலங்களில் வெளியான பல எதிர்மறையான கருத்துகளையும், அவற்றின் தற்போதைய யதார்த்த நிலைகளையும் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் அரசியல் அரங்கில் மிகுந்த கவனம் ஈர்த்து வருகின்றன.

ஆரம்பத்தில் ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தபோது, கட்சியை இரண்டாக உடைத்துவிடுவார் அல்லது தேர்தலுக்கு முன்பே வெளியேறிவிடுவார் என்று ஊடகங்களும் அரசியல் எதிரிகளும் வர்ணித்தனர்.

அதேபோல், மத்திய அரசின் ஐ.ஆர்.எஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் ஒருவரின் கட்சியில் இணைந்த அருண்ராஜ் தனது எதிர்காலத்தை நாசமாக்கிக் கொண்டார் என்று விமர்சிக்கப்பட்டார். மேலும், மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்தபோதும், அவருக்கு உரிய மரியாதை கிடைக்காது என்றும், புஸ்ஸி ஆனந்த் வழியாக மட்டுமே அவர் கட்சித் தலைமையைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் பலரும் ஏளனம் செய்தனர்.

இவற்றையெல்லாம் தாண்டி, தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகையைக் குறித்தும் “அரசியல் அனுபவமற்ற நடிகர், தாக்குப்பிடிக்க மாட்டார்” என்ற ரீதியில் எராளமான அவதூறுகள் பரப்பப்பட்டன.

ஆனால், இந்த விமர்சனங்களை எல்லாம் எதிர்கொண்டு தற்போது இவர்கள் அனைவரும் அரசியல் களத்தில் வெற்றிகரமாகக் காலூன்றி, தங்களைப் பற்றிய அனைத்துத் தவறான கணிப்புகளையும் பொய்யாக்கியுள்ளனர்.

“>

 

விமர்சனங்களை முன்வைத்தவர்களே தற்போது அரசியல் களத்தில் உண்மையான கேலிக்குரியவர்களாக மாறிவிட்டதாகக் கூறி இந்தப் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.