2026 ஆம் ஆண்டுக்கான யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், பிரான்ஸ் வீரர் டெரென்ஸ் அட்மேன் மற்றும் ஸ்பெயின் வீரர் ஜௌம் முனார் மோதிய ஆட்டம் டென்னிஸ் உலகைக் குலுக்கியுள்ளது. முதல் இரண்டு செட்களை எளிதாகக் கைப்பற்றிய அட்மேன், கடுமையான உடல் உபாதைகள், பிசியோவுடன் ஏற்பட்ட நேரடி மோதல் மற்றும் இறுதியில் ஒரு தோல்வி என இந்த ஆட்டம் முழுவதும் பெரும் பரபரப்பாக நகர்ந்தது.
போட்டியின் ஐந்தாவது செட்டின் தொடக்கத்தில் அட்மேன் கடும் தசைப்பிடிப்பு மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டார். கோர்ட்டில் சரியாக நடக்க முடியாமல் தவித்த அவர், ஒரு கட்டத்தில் விதிகளின்படி வழக்கமான சர்வீஸுக்குப் பதிலாக ‘அண்டர்ஆர்ம் சர்வீஸ்’ செய்வதற்கும், தனது பலமற்ற வலது கையைப் பயன்படுத்திப் பந்துகளை வீசுவதற்கும் தள்ளப்பட்டார்.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, 1-2 என பின்தங்கியிருந்தபோது அட்மேன் பிசியோவை வரவழைத்தார். ஆனால் டென்னிஸ் விதிகளின்படி, தசைப்பிடிப்புகளுக்கு மைதானத்தில் மருத்துவச் சிகிச்சை அளிக்க அனுமதி இல்லை என்பதால் பிசியோ அவருக்குச் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார். தான் தசைப்பிடிப்பால் அல்ல, கடுமையான வலியால் அவதிப்படுவதாகக் கூறிய அட்மேன், பிசியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த அவர், “மன்னிக்கவும், நீங்கள் கொஞ்சம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாமல் எனக்குச் சிகிச்சை அளிப்பீர்களா?” என்று கோபமாகக் கேட்டதுடன், அவரது தகுதிக்கான சான்றுகளையும் கேள்வி எழுப்பினார். இந்த விவாதம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tense scenes between Terence Atmane & the physio during his match against Munar at the U.S. Open
The physio will not treat him for an injury because he insists Terence is suffering from cramps.
Terence argued with him, but the physio still would not treat him.
“Excuse me, can… pic.twitter.com/c8NFZKcAEB
— The Tennis Letter (@TheTennisLetter) August 30, 2026
கடும் வலியையும் மீறி விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடிய அட்மேனை, ஸ்பெயின் வீரர் ஜௌம் முனார் இறுதியில் வீழ்த்தினார். கிட்டத்தட்ட 5 மணி நேரம் நீடித்த இந்த மாரத்தான் போராட்டத்தில், ஆரம்பத்தில் இரண்டு செட்களை இழந்திருந்தாலும், மிரட்டலான கம்பேக் கொடுத்த முனார் 6-7(5), 3-6, 6-1, 7-6(4), 7-5 என்ற செட் கணக்கில் அட்மேனை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் பிரதான சுற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் அட்மேனின் நீண்ட காத்திருப்பு மேலும் நீண்டுள்ளது. இருப்பினும், போட்டி முழுவதும் அவர் வெளிப்படுத்திய போராட்டக் குணமும், பிசியோவுடன் அவர் செய்த மோதலும் யூஎஸ் ஓபன் முதல் நாளின் பேசும் பொருளாக மாறியுள்ளது.
