2026 ஆம் ஆண்டுக்கான டெல்லி பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. இதில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணியும் சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இப்போட்டியில் சவுத் டெல்லி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், தொடர் முழுவதும் விக்கெட்டுகளைக் குவித்து ‘பர்பிப் கேப்’ வசம்கொண்டவருமான அன்ஷுமன் ஹூடா, எதிர்பாராத விதமாக நடுவரால் பந்துவீச தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர் முழுவதும் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அன்ஷுமன் ஹூடா, இறுதிப்போட்டியிலும் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியில் அவர் வீசிய பந்துகள் இடுப்பு உயரத்திற்கு மேல் சென்றதால் விதிமுறை மீறலாகக் கருதப்பட்டு நடுவர்களால் எச்சரிக்கப்பட்டார்.

 

கிரிக்கெட் விதிகளின்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் தொடர்ந்து ஆபத்தான உயரத்தில் பந்துகளை வீசியதால், போட்டியின் நடுவிலேயே அன்ஷுமன் ஹூடா தொடர்ந்து பந்துவீசுவதற்கு நடுவர்கள் தடை விதித்தனர். தொடரின் தலைசிறந்த ‘விக்கெட்டுகளை வீழ்த்தும் இயந்திரமாக’ வலம் வந்த ஹூடாவுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத பின்னடைவு மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பந்துவீச தடை விதிக்கப்பட்டாலும், இந்தத் தடைக்கு முன்பாக அவர் ஒரு முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றினார். ஹூடாவின் இந்தச் சிறிய பின்னடைவுக்குப் பிறகும், சவுத் டெல்லி அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணியை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களுக்குக் கட்டுப்படுத்தினர்.

மேலும் இறுதிப்போட்டியில் பந்துவீச தடைபடும் சோகம் ஏற்பட்டாலும், இந்தத் தொடர் முழுவதும் அன்ஷுமன் ஹூடா வெளிப்படுத்திய அசாத்திய திறமையும், அவரது பந்துவீச்சுமே சவுத் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.