மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் விளையாடிவிட்டுத் திரும்பிய எட்டு வயது சிறுவன் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவுமுறை நிபுணரான மேகா ரவால் என்பவரால் ஓட்டிச் செல்லப்பட்ட அந்த வாகனம் சிறுவன் மீது மோதியதில், அவனது உயிரைப் பறித்துள்ளது . தன் ஒரே மகனை இழந்து தவிக்கும் அந்தப் பெற்றோரின் கதறல் அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளதுடன், ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது .
Mumbai, Maharashtra: A tragic road accident took place near Mount Mary Steps on Sunday, August 30, in which an 8-year-old boy, identified as Ansh Gupta, was killed after being hit by a car.
Parents of the deceased say, “Who will call us Papa and Mummy now? We want justice. My… pic.twitter.com/PwUykW80Je
— IANS (@ians_india) August 30, 2026
விபத்து நடந்த சமயத்தில் கார் ஓட்டிய பெண் கைப்பேசியைப் பயன்படுத்தியதாகவும், காரை அதீத வேகத்தில் இயக்கியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில், விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போன்று மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாந்திரா காவல்துறையினர் ஓட்டுநர் மேகா ரவாலைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாகப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிராந்திய போக்குவரத்து அலுவலக நிபுணர்களின் உதவியோடு விபத்து நடந்ததற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
