மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிகழ்ந்த ஒரு நெஞ்சைப் பிளக்கும் கார விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளதுடன், ஓட்டுநர்களின் அலட்சியம் ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் எப்படி சீரழித்துவிடும் என்பதற்குச் சாட்சியாக மாறியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு சுமார் 15 ஆண்டுகள் நீடித்த நீண்ட காத்திருப்புக்குப் பின், எண்ணற்ற பிரார்த்தனைகளுக்கும் வேண்டுதல்களுக்கும் பிறகே அந்தத் தாயின் மடியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குடும்பத்தின் ஒரே வெளிச்சமாகவும், பெற்றொரின் ரத்தமும் சதையுமாக வளர்ந்து வந்த அந்தப் பிஞ்சு உயிர்தான், கார் ஓட்டும்போது கைபேசியில் பேசிய ஒரு பெண்ணின் கவளமின்மையால் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டுள்ளது.

காரை ஓட்டி வந்த பெண், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டே அலைபேசியில் கவனமாகப் பேசிக்கொண்டு வாகனத்தைச் செலுத்தியதே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சாலையில் கவனத்தைச் செலுத்தாமல், போனில் பேசியபடி காரை இயக்கிய அந்தப் பெண்ணின் ஒரு நொடி அலட்சியம், 15 ஆண்டுகள் தவம் இருந்து பெற்ற குழந்தையை அந்தத் தாயிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிட்டது.

விபத்து நடந்த இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் உயிரின் துண்டை ஏந்தி அழுது புலம்பிய தாயின் அவலக் குரல், அங்கிருந்த அனைவரின் நெஞ்சையும் வெடிக்கச் செய்தது. தன் கண் முன்னேயே தனக்குக் கிடைத்த ஒரே குழந்தை பலியாகிவிட்டான் என்ற கொடூரமான நிஜத்தை அந்தப் பெற்றோரால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும் “என் குழந்தை இறந்துவிட்டான்” என்ற உண்மையை உணராமல், அவன் மீண்டும் உயிரோடு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் அந்தத் தாய் கதறித் துடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது.

இந்நிலையில் கார் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ள இந்தச் சம்பவம், அந்தப் பெண்ணின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கொந்தளிப்பை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.