கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவுல் ஜான் அஜு என்ற 16 வயது சிறுவன், தனது மிகச் சிறிய வயதிலேயே ஏஐ (AI) ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாகத் தொடங்கி, 15 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஒட்டுமொத்த தொழில் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ரவுல் ஜான் அஜு உருவாக்கியுள்ள இந்த ஏஐ நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுள் அவரது சொந்தத் தந்தையும் ஒருவர் என்பதுதான் இதில் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான விஷயம். தனது சொந்த நிறுவனத்திலேயே தனது தந்தையை வேலைக்கு அமர்த்தியுள்ள ரவுல், அவருக்கு மாதச் சம்பளமாக ரூ.2 லட்சம் வழங்கி கௌரவித்து வருகின்றார்.
தன்னிடம் அதிநவீன தொழில்நுட்ப அறிவு மட்டுமே இருந்தபோதிலும், பல வருடங்களாகத் தனது தந்தை சேர்த்து வைத்துள்ள பல்வேறு தொழில்நுட்ப அனுபவங்களையும் நுணுக்கங்களையும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்திற்காகவே அவரைத் தனது நிறுவனத்தில் பணியில் அமர்த்தியதாக ரவுல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 16 வயதில் சாதனை படைத்துத் தந்தைக்கு வேலை கொடுத்து அழகு பார்த்த இந்தச் சிறுவனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
