அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை கூட்டத்தில், வீடற்றவர்களுக்காக வரிப்பணத்தில் தனியார் வசதியுடன் கூடிய இடங்களை அமைக்க வேண்டும் என்ற வினோதமான யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடற்றவர்கள் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள இதுபோன்ற பாலியல் கூடாரங்கள் உதவும் என கூட்டத்தில் பேசிய ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த யோசனை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்த காணொளியும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தத் திட்டத்தை முன்வைத்த நபர், வீடற்றவர்களுக்கு பாலியல் கூடாரங்கள் கூடிய சுகாதாரமான இடங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற வசதிகள் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவும் எனவும் அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால், இந்த யோசனைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Councilwoman Traci Park (@councilwomantracipark)

இந்த விவகாரம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினர் டிரேசி பார்க் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட காணொளியில், இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், நகரின் வரிப்பணத்தை இதுபோன்ற திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது என்ற கருத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். பார்க் வெளியிட்ட எதிர்வினை தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடற்றோர் பிரச்னை தொடர்ந்து முக்கிய விவகாரமாக இருந்து வருகிறது. வீடற்றவர்களுக்கான வீடுகள் மற்றும் பல்வேறு சேவைகளுக்காக ஏற்கெனவே பெருமளவில் நிதி செலவிடப்பட்டுள்ளதாக பார்க் தெரிவித்துள்ளார். நகரில் 45,194 பேர் வீடற்றவர்களாக இருப்பதாக அந்நகரின் வீடற்றோர் சேவை ஆணையத்தின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில், நகர சபை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட வித்தியாசமான யோசனை அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.