பெருந்தலைவர் காமராஜருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி விருதுநகரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக, காமராஜர் பெயரிலான இத்திட்டத்தை அவர் தான் படித்த பள்ளியான விருதுநகர் கே.வி.எஸ் நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க இருப்பது இந்த நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தீவிர பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளது. விழாவிற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
விருதுநகருக்கு வருகிறார் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்:
காலை உணவுத்திட்டத்தை காமராஜர் பெயரில் தமிழ்நாடு அரசு மாற்றி விரிவாக்கம் செய்துள்ளது… இத்திட்டத்திற்கு பெயர் மாற்றியதோடு காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் படித்த கேவிஎஸ் நடு நிலைப்பள்ளியில் வைத்து திட்டத்தை… pic.twitter.com/odx60Y2jdV
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 27, 2026
“>
தங்களது சொந்த ஊரில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்ள இருப்பதால், விருதுநகர் மாவட்டமே தற்போது விழாக் கோலம் பூண்டுள்ளதுடன், இப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
