சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று விலை சற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடர்கிறது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1,20,080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,010 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 16375 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,31,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையிலும் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.