புதுச்சேரி நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்த சேராநாதன் என்பவர், மாஹே பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடிப் பணியிட மாற்றமானது தற்போது சட்ட வட்டாரங்களிலும், அரசியல் களத்திலும் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நீதிபதி சேராநாதன் அவர்கள், தமிழக அமைச்சரின் குடும்பத்தினருடன் தொடர்புடைய ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, அமைச்சர் மரியா வில்சன் தனது சகோதரரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட புகாரை ஏற்று விசாரித்து வந்த நீதிபதி என்பதால், இந்தத் திடீர் இடமாற்றம் பல்வேறு தரப்பினரிடையே கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் தீப்தி அருவிமொழி அவர்களின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பில், நீதிபதி சேராநாதன் உடனடியாக மாஹே மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவராகப் பொறுப்பேற்கக்  வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை முக்கியக் கட்டத்தில் இருந்தபோது வெளியான இந்த திடீர் இடமாற்றம் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.