சினிமாவில் நடிகர் விஜய்யை ஹீரோவாகப் பார்த்த பொதுமக்களுக்கு, தற்போது தொலைக்காட்சிகளில் அவரது அரசியல் பேச்சுகளையும் செயல்பாடுகளையும் பார்க்கும்போது நடிகர் ரகுவரன் பாணியிலான வில்லனாகத் தெரிகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். விஜய்யின் நிஜமான சுபாவமும் கேரக்டரும் அதுதான் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி க்ழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது அரசியல் அணுகுமுறை மற்றும் கருத்துகள் குறித்து டிடிவி தினகரன் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். விஜய்யின் பேச்சுக்கள் மற்றும் முடிவுகள் அரசியல் முதிர்ச்சியற்றதாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது அறிக்கைகள் குறித்துத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், டிடிவி தினகரனின் இந்த “ரகுவரன் வில்லன்” ஒப்பீடு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவிலான சலசலப்பையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
சினிமா பிம்பத்திற்கும் நிஜ அரசியல் நடைமுறைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்று குறிப்பிட்ட தினகரனின் இந்த அதிரடிப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களிலும் தவெக தொண்டர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
