உத்தரப் பிரதேசத்தில் இணையத்தில் பரவிய வீடியோ சர்ச்சை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் அனு கோலிஸ், யூடியூப் நேரலையில் தோன்றி தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதி இல்லாமல் எடுத்துப் பகிர்ந்து, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து கடும் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிவித்த அவர், தொடர்ந்து தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் தனது குடும்பத்தினரும் குறிவைக்கப்படுவதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், இந்தத் தொடர் நெருக்கடிகளால் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்கள் மனதில் தோன்றுவதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
வைரலான வீடியோவில் தான் அணிந்திருந்த உடை ஆக்ராவில் உள்ள ஒரு மாலில் தாயாருடன் சென்று வாங்கியது என்றும், அதில் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய விஷயமும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். தனது குடும்பத்திற்கே அதில் பிரச்சனை இல்லாதபோது, மற்றவர்கள் ஏன் இதை ஒரு பெரிய விஷயமாக்குகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் தவறான உள்ளடக்கங்களை உருவாக்கிப் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். சந்தேகப்படுபவர்கள் தன்னுடைய மற்றும் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளைச் சோதித்துப் பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ள அவர், தனது பதிவுகள் அனைத்தும் உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பானவை மட்டுமே என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
#मेरठ:-आपत्तिजनक वीडियो मामले में निलंबित सब इंस्पेक्टर अनु ने दी सफाई। मेरठ में आपत्तिजनक वीडियो के आरोप में निलंबित सब इंस्पेक्टर अनु ने सफाई देते हुए कहा कि वीडियो में पहनी ड्रेस वह मॉल से लाई थीं और उनके परिवार को इसे पहनने पर कोई आपत्ति नहीं है। उन्होंने वीडियो में दिख रहे… pic.twitter.com/aGkJN7wfk8 — UttarPradesh.ORG News (@WeUttarPradesh) August 23, 2026 “>
எந்தவொரு விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அனு கோலிஸ், தான் எந்தத் தவறும் செய்யாததால் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். தற்போது இந்த விவகாரம் குறித்துக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
